Skip to main content

ஒருமுலைச்சோலை ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் கிழக்குப் பல்கலைக்கழக விவசாயபீடத்தினால் முன்னெடுக்கப்பட்ட பாடசாலைத்தோட்டம் அமைத்தலை ஊக்குவிக்கும் செயற்திட்டம்

school1.jpg

கிழக்குப்பல்கலைக்கழக விவசாயபீடம் உணவுப்பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் அண்மைக்காலமாக கிராம மக்களிடையே பயிர்செய்கை நடவடிக்கைகளை ஊக்குவித்து வருகின்றது. இதன் அடிப்படையில் பல்கலைக்கழக பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட கத்தரி மற்றும் மிளகாய் கன்றுகள் பைகளில் நடப்பட்டு சிறிது காலம் பராமரிக்கப்பட்டு ஒருமுலைச்சோலை ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலய மாணவர்களின் விவசாயம் சார்ந்த கற்றல் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கோடு 13.09.2022 அன்று காலை 10.00 மணியளவில் பாடசாலையினுடைய முன்றலில் பயிர் விஞ்ஞானத்திணைக்களத் தலைவரின்  தலைமையில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களிடம் கையளிக்கப்பட்டன.